625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக 218 வழக்குகளுடன் தொடர்புபட்டவர்கள் சமுதாயம் சார் சீர் திருத்த கட்டளைக்கு அமைவாக சமுதாயப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமை மதுபோதையில் வாகனம் செலுத்தியமை கசிப்பு வைத்திருந்தமை மணல் அகழ்வில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக சமுதாயம் சார் சீர் திருத்தப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக தற்போது 218 பேர் சமுதாயம் சார் சீர் திருத்த கட்டளைச்சட்டத்தின் கீழ் சமுதாயப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு சமுதாயப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருபவர்களுக்கு குற்றங்களிலிருந்து விடுபட்டு திருந்தி வாழ்வதற்கான வகையில் வழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் செயலமர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment