சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் போராட்டங்கள், பேரணிகள் என நடைபெற்று வருவதோடு, காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியிடம் காணாமல் போனோரின் உறவுகள் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய காணாமல் போனோரின் உறவினர்கள், கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு அதனையடுத்து குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், கிராமிய பெண்கள் அமைப்புக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

disappeared-peoples-protest-4-720x480 IMG_7727 IMG_7730 IMG_7734 IMG_7737 IMG_7738 IMG_7740 IMG_7742 IMG_7744 IMG_7746

 

 

Comments

comments, Login your facebook to comment