625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)கிளிநொச்சி உதயநகர் கிழக்கில் கடந்த 22 ஆம் திகதி ஜந்து பேர் கொண்ட குழுவினர் தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கடந்த 22 ஆம் திகதி ஜந்து பேர் அடங்கிய குழுவினர் உதயநகர் கிழக்கைச்சேர்ந்த அருணாசலம் கதிரமலை வயது 42 என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவரை மறுநாள்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக யாழ் போதான வைத்தியசாலைக்கு மாற்றியுள்ள நிலையில் சிகிசை பயனிற்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொலீஸாரின் விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment