625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)2016 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதற்கான பயணம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான சி.சிறீதரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் மேற்கொண்டார்.

கிளிநொச்சி உருத்திரபுரம், மற்றும் ஊற்றுப்புலம் பகுதிகளில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படுகின்ற பால நிர்மாணப்பணிகள் குறித்து உரிய அதிகாரிகளோடு சென்று நிலைமைகளை அவதானித்தார்.

அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மக்களின் பல்வேறு அபிப்பிராயங்களை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கானவை, அவை பற்றிய திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது மக்களின் அனுபவமும் கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்ற போது வெளிப்படைத்தன்மை பேணப்படுவதுடன் திட்டத்தின் விபரங்கள் அதற்கான ஒதுக்கீடுகள் போன்றவை பொதுமக்கள் பார்க்கக் கூடியவாறு காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அது தவிர இவ்வருடம் அதிகமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், பல ஆயிரம் மில்லியன் செலவில் ‘இபாட்’ திட்டம் மூலம் இரனைமடு குளத்தின் கீழான சகல கிராமங்களும் விவசாய ரீதியிலான பலன்களைப் பெறுகிறார்கள்.

அது தவிர பல பாலங்களின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வீதிகளைப் பொறுத்தவரை பல கிலோமீற்றர் வீதிப்புனரமைப்பதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான கிரவல் மண்ணைப்பெறுவதில் தாமதங்கள் நிலவுகிறது.

விரைவில் அப்பிரச்சினைகளுக்கு உரிய முறைப்படி தீர்வு காணப்பட்டு பருவ கால நிலையையும் கருத்தில் கொண்டு திட்ட அமுலாக்கம் விரைவு படுத்தப்படும் என்றார்.

இப்பயணத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, வீதி அபிவிருத்தியின் பிரதம எந்திரி இளங்கீரன், எந்திரிகளான முரளீதரன், அரங்கன் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார், கட்சியின் வட்டார இணைப்பாளர்களான திலக்சன், யதீஸ்வரன், சுரேந்திரன், கிருபாகரன், எழில்வேந்தன் ஆகியோரும் கிராமிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3) 625.0.560.320.500.400.197.800.1280.160.95

Comments

comments, Login your facebook to comment