625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)வவுனியாவில் திருட்டு சம்பவத்துடன் தொடர்படையதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்கள் ஐந்த பேரை வவுனியா பொலிசார் இன்று 31-08-2015 கைது செய்துள்ளனர்.

கடந்த 13-08-2016 வவனியா வேப்பங்குளம் பட்டானிச்சுர் பகுதியில் இரவு 12.00 மணியளவில் வீடுபுகுந்த கொள்ளையர்களை எதிர்த்து போராடிய வீட்டு உரிமையாளரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த 40 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றிந்தனர்.

இத்திருட்டு சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்ட்டிருந்த நிலையில்

இக்கொள்ளைச்சம்பவம் குறித்து தனிப்படை அமைத்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரையும், வேப்பங்குளம் பட்டானிச் சூரைச் சேர்ந்த இரண்டு பேரையும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்;
இச்சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே வவுனியா நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது மேற்படி கொள்ளைச்சம்பவம் மற்றும் அதில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பொலிசாருக்கு குறித்த நபர் வழங்கியதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்ப்பட்டுள்ள ஒருவர் வவுனியா பட்டானிச்சுரைச் சேர்ந்த முன்னாள் நகரசபை உறுப்பினர் ஒருவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ள வவுனியா பொலிசார் நாளை 01-09-2016 சந்தேக நபர்களை வவுனியா நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

Comments

comments, Login your facebook to comment