625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)விஷ ஊசி தொடர்பான விவகாரத்தினைத் தொடர்ந்து இன்று மாலை கிளிநொச்சி வைத்தியசாலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது வைத்தியசாலையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இராணுவ புலனாய்வாளர்களினதும் மற்றும் வேறு பல பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களினதும் நடமாட்டத்தினால் பல முன்னாள் போராளிகள் பரிசோதனைகளை மேற்கொள்ளாது திரும்பியுள்ளனர்.

கிளிநொச்சியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பலர் வசித்து வருகின்ற நிலையில், இன்று நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் ஏழு பேர் மட்டுமே பங்கேற்றதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

மீண்டும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை பரிசோதனைகள் நடைபெற இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் புலனாய்வாளர்களை இனங்கண்டு அவர்களை தடுப்பது வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு முடியாத காரியமாக இருந்தாலும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பரிசோதனையின் போது புலனாய்வாளர்களை வைத்தியசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்காதவாறு, உரிய தரப்பினருக்கு கடிதம் மூலம் அறிவித்து தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறு முன்னாள் போராளிகள் கேட்டு நிற்கின்றனர்.

Comments

comments, Login your facebook to comment