20160902_094604கிளிநொச்சி – பெரிய பரந்தன் பகுதியில் ஜப்பானிய அரசினது நான்கு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை நேற்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் வகையில் களஞ்சிமொன்றை அமைத்து தருமாறு விவசாயிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் யு.என். கபிரட் நிறுவனத்தினால் இந்த களஞ்சியசாலை அமைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்வில், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஈ.தயாரூபன், மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

20160902_093945

20160902_094011 20160902_094122 20160902_094604

 

Comments

comments, Login your facebook to comment