11கிளிநொச்சி – பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (சனிக்கிழமை) பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தலைமையில் இடம்பெற்ற குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், வை.தவநாதன் உள்ளிட்ட பலர் கந்துகொண்டனர்.

கல்வி, விவசாயம், மீள்குடியேற்றம், போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் இன்று ஆராயப்பட்டன. குறித்த கூட்டம் இடம்பெற்று கொண்டிருக்கையில் பூநகரி பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்று தனி நபருக்கு சொந்தமானது என தெரிவித்து, குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோருக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இதன்போதே விஜயகலா மகேஸ்வரன் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

22-720x480 11 IMG_8166 IMG_8173

 

Comments

comments, Login your facebook to comment