கிளிநொச்சி பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆணொருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார், இராணுவத்தினரின் துணையுடன் சடலத்தை மீட்டுள்ளனர். அத்தோடு சடலம் காணப்படும் இடத்தில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத அதேவேளை, விபத்தினால் இவ் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பிச் சென்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

a b c d e f

 

Comments

comments, Login your facebook to comment