625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)கிளிநொச்சி பூநகரி மட்டுவில் நாடு பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள தமது காணிகளை விடுவித்து அதில் தங்களை மீள்குடியேற்றுமாறு 18 குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மட்டுவில் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அதிகளவான காணிகள் இராணுவத்தினர் வசம் உள்ளன.

இந்த நிலையில் இப்பகுதியில் தங்களது காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதால் தாங்கள் தற்போது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உறவினர் நண்பர் வீடுகளிலும் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தங்களை தமது சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றுமாறு கோரி ஏழு தனியார் காணிகளில் 6 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோன்று மட்டுவில் நாடு மேற்கு பகுதியில் பதினொரு பேருக்கு சொந்தமான காணிகள் பொலிஸாரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதில் நான்கு குடும்பங்கள் தங்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment