625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)_1இலங்கையில் ஐந்து ஈச்சரங்கள் இருந்துள்ளன. இது இலங்கையில் தமிழ் மக்கள் நாடு பூராகவும் வாழ்ந்தமைக்கான சான்றாகும்.

இவ்வாறு வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று ஒரு பகுதியில் கூட உரிமையுடன் வாழ்வதற்கு போராடி வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

2009ஆம் ஆண்டு வரை தமிழ் மக்கள் விடுதலைக்கான ஒரு ஆயுத போராட்டத்தினை நடத்தியிருந்தனர். 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழர்கள் பகுதியில் குடியேறிய இராணுவத்தினர் திட்டமிட்ட வகையில் பௌத்த விகாரைகளை அமைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போர்த்துகேயர், ஒல்லாந்தர் மேற்கொண்டதைப்போன்று இலங்கை இராணுவத்தினர் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை இராணுவத்தினரை வைத்துகொண்டு இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒரு சதி நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மாணவர்களின் பாட விதானங்களில் இருந்தும் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் வரலாறு இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment