கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற வீதி விபத்தில் மிதிவெடியகற்றும் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முரசுமோட்டை வீதியில் இவ்விபத்து இடம்பெற்றதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பரந்தனில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் புளியம்பொக்கணையிலிருந்து பரந்தன் நோக்கிச் சென்ற காரும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்களும் படுகாயமடைந்துள்ளனர்.

உழவனூர் பகுதியைச் சேர்ந்த பா.நிதர்சினி (வயது 25), நா.ஜெகதீஸ்வரி (வயது 32) ஆகிய இருவருமே படுகாயங்களுக்குள்ளாகினர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

4446-1-f4e2d142b92c31b0dcd549c7ce09bfb1

4446-2-f4e2d142b92c31b0dcd549c7ce09bfb1

Comments

comments, Login your facebook to comment