கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை 16-08-2016 இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக புடவை மற்றும் பழக் கடைகள் என்பன முற்றாக எரிந்து அழிந்துள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது

இன்று இரவு எட்டு முப்பதுக்கும் ஒன்பது மணிக்கும் இடையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் அனைத்து பழக் கடைகளும், 60க்கு மேற்பட்ட புடவை கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளன.

தீ பிடித்து எரிய தொடங்கிய நிலையில் வேகமாக வீசிய காற்று காரணமாக படிப்படியாக எல்லாக் கடைகளுக்கும் தீ வேகமாக பரவி பெரும் சுவாலை விட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் உடனடியாக பொலீஸ் நீர்த்தாங்கி மூலம் தீ அனைக்கும் முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது. இருந்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்தும் தீ சுவாலை விட்டு எரிந்து வேகமாக பரவியது.

பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்களும் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டனர் இருந்தும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதனையடுத்து கொக்காவில் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தின் தீ அணைக்கும் வாகனமும் கொண்டு வரப்பட்டு கடும் பேராட்டத்திற்கு மத்தியில் தீ தொடர்ந்தும் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில் ஏற்பட்ட தீ 60 க்கு மேற்பட்ட புடவை கடைகளையும், அனைத்து பழக்கடைகளையும் எரித்து அழித்துள்ளது. தீயை அணைக்குமும் முயற்சியில் ஈடுப்பட்ட இராணுவத்தினரில் ஜந்து மேற்பட்டவர்கள் தீக் காயங்களுக்குள்ளும் உள்ளாகியுள்ளனர்

14264019_649241835242065_7067250884074098880_n 14291876_649239595242289_4114988317494248315_n 14316889_649247348574847_126436389801507907_n 14317575_517956198410037_5910984002093657259_n 14317605_1808024866149446_1188302569292901116_n 14322180_649241941908721_3560303686645499781_n 14322258_1808024902816109_5456961595001203337_n 14322671_649241858575396_5444835237737625107_n 14322757_649241875242061_201507183088664920_n 14329894_649226401910275_8634691706133175205_n 14333074_649247375241511_3813709582009013407_n 14333174_649242005242048_7987861200792653966_n 14333196_517956331743357_262485874812713346_n 14333742_649247365241512_641238026355427791_n 14344930_649241825242066_4020068375650475146_n 14355122_1808024779482788_5136563974889042439_n 14358863_649247418574840_4039910879552353450_n 14364905_649239638575618_8058103026599816746_n 14369927_649241918575390_183645924942705993_n 14369989_517956085076715_7950608962882528059_n IMG_6063 IMG_6074 IMG_6080 IMG_6087 IMG_6099 IMG_6116 IMG_6117 IMG_6127 IMG_6139 IMG_6149 IMG_6165 IMG_6181

 

 

Comments

comments, Login your facebook to comment