46953914கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குரங்குகளின் தொல்லைகளைக் கட்டுப்படுத்துமாறு பாடசாலை நிர்வாகத்தினரால் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், மற்றும் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியோரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது.

குரங்குகளைக் கட்டுப்படுத்தி மாணவர்களின் கல்விக்கு விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி குளப்பக்கம் இருந்து நாள்தோறும் பாடசாலைக்குவரும் பெருமளவு குரங்குகள், மாணவர்களின் உணவுகளை எடுத்து உண்பதாகவும் மாணவர்களின் நீர் அருந்தும் குழாய்களில் குரங்குகளும் நீர் அருந்துவதன் காரணமாக கிருமித்தொற்றுகள் ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கற்றல் உபகரணங்களை குரங்குகள் எடுத்துச் சென்று மரங்களில் வைத்து விளையாடுவதாகவும் இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் கரைச்சி பிரதேச செயலகக் கூட்டங்களிலும் குரங்குகளைக் கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அன்னாசி, மா, மரக்கறி வகைகள் என்பவற்றினை குரங்குகள் சேதமாக்கி வருவதாகவும் குரங்குகளை நகரிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் காடுகளில் கொண்டு சென்று விடுவதற்கான வழிகளை உருவாக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களம் குரங்குகள் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment