625.368.560.350.160.300.053.800.560.160.90தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை திட்டிய குற்றச்சாட்டில் உழவனூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் பொலிசார் தர்மபுரம் உழவனூர்ப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தினை முற்றுகை இட்டுள்ளனர் குறித்த உற்பத்தி நிலையத்தில் இருந்த சந்தேக நபர் பொலிசார் முன்னிலையிலையே தப்பி ஓடியதனை அடுத்து சந்தேக நபரை இனம் கண்டு கொண்ட தர்மபுரம் பொலிசார் மறுநாள் சந்தேக நபரை கைது செய்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்துவதற்காக அழைத்து வந்த வேளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் முன்னால் வைத்து தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை குறித்த சந்தேக நபரின் தாயார் திட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி எம் சத்துரங்க அவர்களினால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் போடப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பெண்ணை நேற்றையதினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி ஏ ஏ ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்ப்படுத்தியத்தை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி அரச கருமத்திற்கு இடையூறாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த பெண்ணை எதிர்வரும் இருபத்தாறாம் திகதி வரைக்கும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Comments

comments, Login your facebook to comment