625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)கடந்த 11ம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிக கடைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றிருந்தார்

அதன் பிரகாரமும் கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலும் தீ விபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிக கடைகளை அமைப்பதற்கு இன்று ஒன்பது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூர்வாங்க வேலைகளை முடித்து குறித்த வேலைத்திட்டத்தினை ஆக்கக் கூடியதாக ஒன்றரை மாத காலத்திற்குள் பூர்த்தி செய்ய பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்கள் வெகுவிரைவில் அவர்களது வர்த்தகத்தினை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வட மாகாண முதலமைச்சரினால் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிற்கு வழங்கப்பட்டு இன்றைய தினமே கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சநாதனிற்கு வழங்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment