கிளிநொச்சி ஏ-9 வீதி முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏ-09 வீதியின் திருமுறிகண்டி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி இரணைமடுவைச் சேர்ந்த வேலாயுதம் சதீகரன் (39) என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

14445991_556482921222609_696974875597268931_n 14457280_556482881222613_5988596978880146707_n 14469525_556482844555950_7524849096253034678_n

Comments

comments, Login your facebook to comment