கிளிநொச்சி, சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து கிபிர் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு நேற்று விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள், தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து தர்மபுரம் பொலிசாரால் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் அடங்கிய குழுவினர் குண்டை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு, 6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

K1 K2 K3 K4

Comments

comments, Login your facebook to comment