43-5கிளிநொச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி உள்ளது.

இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள் , உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்

இதில் இப்பொழுது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமை உரையினை அடுத்து வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் சிற்றுரையுடன் ஆரம்பமாகிய இக் கலந்துரையாடலில் இப்பொழுது சுகாதாரம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுக் கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

41-6 42-6 43-5

Comments

comments, Login your facebook to comment