20160927_0953421கிளிநொச்சி தொழில் பயிற்சி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் பயிற்சி கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களிற்கு தொழில் சார் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது,

கிளிநொச்சி 55ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 14 மாற்று திறனாளிகள் மற்றும் 16 இளைஞர் யுவதிகளிற்கு குறித்த தொழில் சார் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ரகமா நிறுவனத்தின் உதவியுடன் வழங்கி வைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் என்னிடம் உள்ளன. குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சியில் கடமைகளை பொறுப்பெடுத்த போது, மாற்று திறனாளிகளை சந்தித்திருந்தேன்.

அப்போது அவர்களிற்கான பல திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுத்து செல்வதற்கு வருகை தந்திருந்தவர்களிடம் முழுமையான தகவல்களை வழங்குமாறு கோரியிருந்தேன். இதுவரை எவ்வித தகவல்களும் வழங்கப்படாமையை இட்டு கவலை அடைகிறேன். மாற்றுத் திறனாளிகளிற்கு முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு தயாராவே உள்ளேன்.

இதேவேளை, தற்போது எமது இனம் சீரழிந்து போவதற்கு இளைஞர், யுவதிகள் மத்தியில் வேலைவாய்ப்புக்கள் இல்லாமையே பிரதான காரணமாகும். இளைஞர் யுவதிகளிற்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கு இவ்வாறு தொழில் சார் பயிற்சிகளையும், அதற்கான உபகரணங்களையும் வழங்கி வைப்பது மாத்திரமன்றி, மேலும் தொழில் வாய்ப்புக்களிற்காக காத்திலுக்கும் இளைஞர் யுவதிகளை இனம் கண்டு அவர்களிற்கு பயிற்சிகளை வழங்குவதற்கு முன்னிற்க வேண்டும்.

எதிர்காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளை தொழில் சார் பயிற்சி நெறிகளிற்கு உள்வாங்கும் பொருட்டு அடையாளம் காணும் செயற்பாடுகளில் நிறுவனங்கள் முன்னின்று செயற்பட வேண்டும்- என்றார்.

20160927_093705

20160927_093801 20160927_101203-720x480 20160927_101232 20160927_0953421

Comments

comments, Login your facebook to comment