625.0.560.320.160.600.053.800.668.160.90_1கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களை வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதற்கட்டமாக தலா இருபத்தி ஐயாயிரம் ரூபா வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் அறிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட கடைத் தொகுதியையும் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன் கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை வடமாகாண சபையினால் கடைகளை அமைப்பதற்கு ஒன்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90_1

Comments

comments, Login your facebook to comment