71கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் அனுசரணையில், வட்டக்கச்சியைச் சேர்ந்த பெற்றோர்களுக்கான விழ்ப்புணர்வு செயலமர்வு வட்டக்கச்சி பொதுநோக்கு மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது.

பெற்றோர்களின் மதுபாவனை பழக்கத்தால் பிள்ளைகள் எவ்விதம் சீரழிகின்றார்கள் என்பது தொடர்பான விளக்கம் மற்றும் விழிப்புணர்வை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலர் இராஜரட்ணம் செந்தூரன் வழங்கினார்.

இந்நிகழ்வில் 68 பெற்றோர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment