14462775_626938004153051_21569622032877037_nகிளி/தருமபுரம் மத்திய கல்லூரிக்கும் கிளி/ முழங்காவில் ம.வி (தேசிய பாடசாலை) க்கும் இடையில் வருடாந்தம் தரும முழக்கம் எனும் பெயரில் இடம்பெறும் மாபெரும் துடுப்பாட்டப் பெருஞ் சமரின் 2வது சமர் இனறைய தினம் (30-09-2016) காலை 9.00 மணியளவில் கிளி/ முழங்காவில் ம.வி மைதானத்தில் வெகு சிறப்பாக ஆரம்பமானது.

கிளி/ முழங்காவில் ம.வி அதிபர் திரு ப. ஆனந்தராஜா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மை விரந்தினராக வட மாகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் .ளைஞர் விவகார அமைச்சர் கௌரவ த. குருகுலராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி கல்வி வலயத்தின் உடற்கல்விப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு பி. விஷ்ணு மற்றும் கண்டாவளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு வீ. இராஜகுலசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தரும முழக்கம் பெருஞ்சமரின் முதலாம் நாளான இன்று நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தருமபுரம் மத்திய கல்லூரி அணியினர் முதலில் களத் தடுப்பைத் தெரிவு செய்தனர்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கிளி/ முழங்காவில் ம.வி (தேசிய பாடசாலை) அணியினர் தமது முதலாவது இன்னிங்ஸ் இல் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதில் அதிக பட்சமாக பிரதீபன் 18 ஓட்டங்களையும் நிஷாந்தன் 17 ஓட்டங்களையும் டிலோஷன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். தருமபுரம் மத்திய கல்லூரி அணி சார்பாக அணித் தலைவர் நிதுஷன் மற்றும் சயந்தன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தருமபுரம் மத்திய கல்லூரி அணியினர் ஆட்ட நிறைவு நாளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இதில் அணித் தலைவர நிதுஷன் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 31 ஓட்டங்களையும் லோஜேந்திரன் 20 ஓட்டங்களையும் றொஷான் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். முழங்காவில் ம.வி அணி சார்பாக டினோஜன் 5 விக்கெட்டுக்களையும் கபில் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்ற இறுதி நாள் போட்டிகள் நாளை நடைபெறும்.

14463226_626934197486765_8625173691340970201_n

14463139_626934190820099_2557268512848245755_n 14462947_626934540820064_8039064580585915871_n 14433141_626934447486740_2116863304256766005_n 14522864_626934300820088_2405797017220720696_n 14519870_626934670820051_3526268272650034686_n 14517613_626934780820040_2808589097763680861_n 14441115_626935187486666_2483132399840896613_n 14492433_626935164153335_7968005910438083959_n 14502980_626935464153305_1617636541697397362_n 14519858_626935680819950_7567179386450033024_n 14522716_626935924153259_5474296813783830830_n 14441148_626938410819677_1335824998248506715_n 14446012_626938144153037_8958732202638156322_n 14462775_626938004153051_21569622032877037_n 14479801_626938897486295_4722984578271113561_n 14484724_626937720819746_4823492511161122607_n 14516597_626938237486361_7346866858813507060_n 14522736_626938690819649_8494433610047902684_n 14523102_626938427486342_4122218268472012442_n 14523113_626937497486435_2548274670023565176_n 14523210_626937690819749_8606108195245423380_n

Comments

comments, Login your facebook to comment