625.0.560.320.160.600.053.800.668.160.90பரந்தன் சந்திக்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரை பார்வைிட உறவினர் எவரும் வருகை தரவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவரது உறவினர்கள் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுக் கொள்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

இன்று மதியம் 2.15 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகாமையில், கிளிநொச்சியில் இருந்து பரந்தன் நோக்கி சென்று கொண்டிருந்த டாட்டா பிக்கப் ஒன்றும் அதே திசையில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியும் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் குறித்த இரண்டு வாகனத்திற்கும் பின்னால் வந்து கொண்டிருந்த அரச பேருந்தின் இரண்டு சில்லுகளிற்கும் நடுவில் இருந்தே பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

குறித்த நபர், கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துவிச்சக்கர வண்டியில் பரந்தன் சந்திக்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்தமையினால் அவர், பரந்தன் பகுதியையோ அல்லது கிளிநொச்சி பகுதியையோ சேர்ந்தவராக இருக்க முடியும் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இவரது உறவினர்கள் இருப்பின் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தினைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment