625.0.560.320.500.400.197.800.1280.160.95 (11)வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாகாண உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி, கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகியது.

‘முயற்சியே எமது மூலதனம் ’ எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சியின் முதல் நாளான இன்று, பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார்.

இக்கண்காட்சியில் வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து பலர் தமது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக உள்ளூர் உணவு பொருட்கள், கைவண்ணப் பொருட்கள் உற்பத்தி, கேக் வகைள், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி, மணப்பெண் அலங்கார பொருட்கள் போன்ற பல உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன் . கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அரச உத்தியோகத்தர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியானது, நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (4) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (5) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (6) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (7) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (8) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (9) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (10) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (11) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (12) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (13) 625.0.560.320.500.400.197.800.1280.160.95

Comments

comments, Login your facebook to comment