625.368.560.350.160.300.053.800.560.160.90கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத செயல்கள் இடம் பெற்றுவருவதாக முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற வண்ணம் உள்ளது.

அந்தவகையில் கிளிநொச்சியின் காடுகளில் மரங்களை வெட்டி கடத்தும் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தல் போன்ற இயற்கை வளத்தினை பாதிக்கும் முக்கிய நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது மட்டுமல்லாமல் சமுகத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளாக கசிப்பு உற்பத்தி மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறான குற்றச்செயல்கள் தொடருமாயின் எதிர்கால சந்ததியினரின் நிலை குறித்து சமுக ஆர்வலர்களும், புத்திஜீவிகளும் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment