1கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் கணகராசா கோபிநாத் 25 வயது என்ற நபரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் 03.10.2016 இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment