கிளிநொச்சி, யூனியன்குளம் காட்டுப்பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த காட்டுப் பகுதிக்குச்சென்ற கிளிநொச்சிப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது குறித்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்முதலாம் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் அறுபத்தி ஐந்து வயதுமதிக்கத்தக்க ஓர் ஆண் எனவும் அவர் தன்வசம் வைத்திருந்த பொருட்களைபார்க்கும் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பொலிசார்சந்தேகிக்கின்றனர்.

குறித்த சடலமானது யூனியன்குளம் மக்கள் குடியிருப்பில் இருந்து பல கிலோமீற்றர்தொலைவில் காட்டுப்பகுதியில் இருப்பதாகவும், குறித்த சடலம்உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் அங்கிருக்கும் எமதுசெய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் குறித்த பகுதியில் மண்ணகழ்வுமற்றும் மரங்கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதற்கானதடயங்களும் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்.

அத்துடன் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிஸாருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக சோதனைகளையும், விசாரணைகளையும் ஆரம்பிக்கஇருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Comments

comments, Login your facebook to comment