கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 2015 ஆம் ஆண்டு மாணவா்களின் இரத்ததான் முகாம் நிகழ்வு முன் மாதிரியான செயற்பாடு என பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

மேற்படி மாணவா்கள் சா்வதேச சிறுவா் தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்திருந்னா். இதில் மாணவா்கள் உட்பட 96 போ் கலந்துகொண்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு ஒவ்வொருவரும் ஒரு பொயின்ட் வீதம் இரத்தம் வழங்கியுள்ளனா்.

மேற்படி மாணவா்கள் தாங்களும் தங்களுடைய ஆசியா்கள், மற்றும் சமூக ஆா்வலா்கள், என அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு முக்கியப் பணியை மேற்கொண்டுள்ளனா். இதனை வருடந்தோறும் மேற்கொள்வதற்கும் அவா்கள் தீா்மானித்துள்ளனா்.

பெரும்பாலான இளம் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பல்வேறு சமூக புறழ்வுகளிலும், சமூக விரோத செயல்களிலும் ஈடுப்பட்டு வரும் நிலையில் மேற்படி இந்த மாணவா்களின் சமூக நலச் செயற்பாடுகள் முன்மாதிரியான செயற்பாடாக பாராட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சமூக சீர் கேடுகள் அதிகரித்துள்ள நிளையில் இப்படிச் சிந்திக்கும் இளைஞர் கூட்டம் அதிகரித்தால் தமிழ் இனத்தின் பயணம் எப்படி அமையும்….

kele-1kele01-1 kele01 kele

Comments

comments, Login your facebook to comment