625.0.560.350.160.300.053.800.668.160.90கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் காவலாளி ஒருவர், பாடசாலையில் அதிபர் ஆசிரியரை கத்தியால் வெட்டப்போவதாக மிரட்டியுள்ளார்.

குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றிய நிலையில், மற்றும் ஒரு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற ஒருவரே இவ்வாறு அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த காவலாளி கத்தியுடன் மதுபோதையில் பாடசாலைக்கு நுழைந்த போது அங்கு சில ஆசிரியர்கள் மட்டும் மேலதிக வகுப்புக்களை நடாத்திக்கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த நபர் ஆசிரியர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவனையும் வெட்டுவேன் அதிபரையும் வெட்டுவேன் என்று கத்தியுள்ளார். அத்தோடு தகாத வாத்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளார்.

இதனால் பெண் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பின்னர் குறித்த நபர் தேடிச்சென்ற இருவரும் இல்லாத நிலையில் தான் கொண்டு சென்ற கத்தியை காட்டி எச்சரித்து சென்றுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அதிபர் மற்றும் ஆசிரியர் இருவரும் இன்று பாடசாலைக்கு செல்லாது வலயக் கல்வித் திணைக்களத்திற்கு அறிவித்துவிட்டு, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் முறைபாடு செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த ஆசிரியர் தற்போது பாதுகாப்பு கருதி கிளிநொச்சி வலயக் கல்வி திணைக்களத்திற்கு இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த பாடசாலைக்கு அயல் கிராமம் ஒன்றில் இருந்து வரும் ஆசிரியையை உந்துருளியில் சென்றவர்கள் பின் தொடர்ந்து சென்று அச்சமூட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த ஆசிரியை சொந்த விடுப்பில் பாடசாலைக்கு சமூகம் தராது இருந்துள்ளார். தற்போது அந்த ஆசிரியையும் பாதுகாப்பு கருதி வலயத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தரப்புக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment