e9619648ccd7e5b4afc38a506e3ab2de_XL-507x330கடந்த ஓகஸ்ட் மாதம் நடைப்பெற்ற தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சைக்கு கிளிநொச்சியில் கல்வி வலயத்தில் இருந்து 2128 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி அதில் 196 மாணவர்கள் வெட்டுப்புள்ளியான 150 க்கு மேல் பெற்று புலமை பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அதேவேளை 238 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அதனடிப்படையில் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் – 32 கிளிநொச்சி மகா வித்தியாலயம் – 34 புனித திரேசா பெண்கள் கல்லூரி – 11 கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயம் – 11 தர்மபுரம் இல1 அ.த.க. பாடசாலை – 10 அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் 09 வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் – 07 முருகானந்தா ஆரம்ப வித்தியாலயம் – 06 அன்னை சாரதாதேவி வித்தியாலயம் – 05 புனித பற்றிமா றோ.க வித்தியாலயம் – 05 அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம் – 05 போன்ற பாடசாலைகள் அதிகளவில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களை கொண்டுள்ளன.
அதேவேளை பல கிராம பாடசாலைகள் கடந்த ஆறு ஏழு வருடங்களுக்கு பின்னா மாணவர்கள் ஒருவர் இருவர் வீதம் பரீட்சையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments

comments, Login your facebook to comment