N=1கிளிநொச்சி, பளைப் பகுதியில் லொறி வாகனத்தில் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகளைக் கடத்திச் சென்றவருக்கு, 45 நாட்கள் கட்டாயச் சிறைத்தண்டனையும் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை (05) தீர்ப்பளித்தார்.

பளைப் பகுதியில் வைத்து, கடந்த மாதம் சாரதியைக் கைதுசெய்த பளைப் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

(05.10.2016) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோது, சாரதி தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

Comments

comments, Login your facebook to comment