dearகிளிநொச்சி நாச்சிக்குடாப் பகுதியில் 5 கிலோ மரை இறைச்சியினை எடுத்துச் சென்ற இருவருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று வியாழக்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

அரிய விலங்கினமாக, வேட்டையாடத்தடை செய்யப்பட்ட மரையை, வேட்டையாடி 5 கிலோகிராம் இறைச்சியை எடுத்துச்சென்ற  இருவரை, நாச்சிக்குடாப் பொலிஸார், நேற்று (06) கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

Comments

comments, Login your facebook to comment