supermarket-gondolas4பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வர்த்தகர்களுக்கு 93, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, பரந்தன், புளியம்பொக்கணை, கண்டாவளை ஆகிய பகுதிகளில் விலைகள் காட்சிப்;படுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை, அதிகூடிய விலைகளில் பொருட்களை விற்பனை செய்தமை போன்;ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 26 வர்த்தகர்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வியாழக்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.

Comments

comments, Login your facebook to comment