625.500.560.350.160.300.053.800.900.160.901986ம் ஆண்டு கைவிடப்பட்ட கிளிநொச்சி இரணைமடு ஏற்று நீர்பாசன திட்டம் மீண்டும் விவசாயிகளின் நன்மைக்காக முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த திட்டத்தினை முன்னெடுத்த செல்வதற்கான கைச்சாத்திடல் நிகழ்வு நேற்று இடம்பெற்றதாக வடமாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் வி.பிரேம்குமார் தெரிவித்தார்.

வடமாகாண நீர்பாசண திணைக்களத்தில் இடம்பெற்ற இரணைமடு ஏற்று நீர்பாசன திட்டம் தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு மாகாண நீர்பாசன பணிப்பாளர் வி.பி்குமார் தலைமையில் இடம்பெற்றது, குறித்த சந்திப்பில் விவசாயிகள், பொறியியலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், ஒப்பந்தகாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசின் நிதியுதவியுடன் இரணைமடு குளத்தில் மேற்கொள்ளப்படும் 5ம்கட்ட அபிவிருத்தி பணி இரணைமடு ஏற்று நீர்பாசன திட்டமாகும். இதற்காக 345 மில்லியன் ரூபா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், 30 வருடங்களின் பின்னர் குறித்த பகுதி விவசாயிகளிற்கு ஏற்று நீர்பாசன திட்டம் மேற்கொள்வதற்கான திட்டம் இது எனவும் நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் 400 விவசாயிகள் நன்மை பெற்ற இரணைமடு ஏற்று நீர்பாசன திட்டத்தில், தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டத்தின் பின்னர் 2500 விவசாய குடும்பங்கள் வரை நன்மை பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாயிகள், 30 வருடங்களின் பின்னர் தாம் ஏற்று நீர்பாசன திட்டத்தின் மூலம் நன்மையினை பெற்றக்கொள்ளவுள்ளதாகவும், இதனால் 2500 குடும்பங்கள் வரை பாரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஏற்று நீர்பாசன திட்டத்தினை பெற்று கொள்வதற்கு ஊடகங்கள் பாரிய பங்கினை செலுத்தியதாகவும் தெரிவிக்கும் விவசாயிகள், இத்திட்டம் வெற்றி பெறுவதற்கு தமது முழுமையான பங்கு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment