625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட கல்வி கலாசார அமையத்தின் அனுசரனையில் வலயக்கல்வி தினைக்களத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர் தின நிகழ்வுகள் நேற்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

வலயக்கல்விப்பணிப்பாளர் க. முருவேல் தலைமையில் இந் நிகழ்வு லெப.கேணல் சந்திரன் பூங்க முன்றலில் ஆரம்பமாகி வரவேற்ப்பு பேரணியாக கூட்டுறவாளர் மண்டபத்தை வந்தடைந்தது அங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்தி பேராசிரியர் சின்னத்தம்பி உரையாற்றினர்.

நல்லமனங்களோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் நல்ல சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் பலரும் ஆசிரியப்பணியை தேர்வு செய்கிறார்கள் அத்தகைய ஆசிரியர்கள் நெகழ்வு போக்குடையவர்களாக பிள்ளைகளின் அந்த நிலையை உணர்ந்தவர்களாக மாறுகின்ற போது ஆசிரியத்துவம் சிறக்கின்றது. கல்வியில் பின்னடைவு என்பதெல்லாம் ஆசிரியர்களது அவசரமும் அவசியமும் இல்லாத செயற்பாடுகளால் சிலவேளைகளில் உருவாக்ககூடும் இணையம் முகநூல் கணிணி விளையாட்டு என்பவை எல்லாம் கடமை நேரத்தில் அவசரமும் அவசியமும் இல்லாத செயல்கள் இந்த செயல்களை ஆசிரியர்கள் சரிவர கடைப்பிடிப்வர்களாக இருந்தால்

நல்லதெரு மாணவ சமூதாயத்தை வடபுலத்தில் உருவாக்க முடியும் என்பதுடன் இந்த பணிக்காக நீங்கள் ஆற்றுகின்ற அர்ப்பணிப்புக்களை வாழ்த்துகின்றேன் என்றார்.

2012ம் ஆண்டின் பிற்பாடு வலய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆசிரிய தின நிகழ்வுகள் இம்முறை நடைபெற்றது இதில் ஒய்வுபெற்ற கல்வியலாளர்கள் 2012 தொடக்கம் 2016 வரை பிரதிப பிரபா விருது பெற்ற நல்லாசிரியர்கள்

பொன்னாடைபோர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பாக பேராசான் சின்னத்தம்பி அவர்களுக்கு நாடாளமன்ற உறுப்பினர் சிறீதரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க வைத்திய கலாநிதி சத்திய மூர்த்தி சந்தன மாலை அணிவித்து கௌரவித்தார் ஆசிரியர்களின் நடன இசை நிகழ்வுகளும் இடம்பெற்றது.625.0.560.320.160.600.053.800.668.160.90625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

Comments

comments, Login your facebook to comment