வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் 54, 532 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருப்பதாக யாழ் மகளிர் அபிவிருத்தி நிலையம் மேற்கொண்டுள்ள புள்ளி விபர கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் 29378 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 5802 குடும்பங்களும், மன்னாா் மாவட்டத்தில் 6888 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6294 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6170 குடும்பங்களும் காணப்படுவதாக குறித்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் பெறப்பட்ட தரவுகளை ஆதராமாக கொண்டு மேற்படி ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக மகளிர் அபிவிருத்தி நிலையம் குறிப்பிட்டுள்ளது.625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment