61-2கராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியின் ஐந்தாம் நாள் நடை பயணம் இன்று 10.10.2016  கிளிநொச்சி இயக்கச்சியில் இருந்து அதிகாலை ஆரம்பமாகியது

ஐந்தாம் நாளான இன்று 10.10.2016 காலை கிளிநொச்சி இயக்கச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் ஏ-9 வீதியூடாகஇயக்கச்சி,ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி நகா் ஊடாக இரணைமடு சந்தியை வந்தடைந்தார்கள்.

கடந்த 2011ஆம் ஆண்டு தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரை மேற்கொள்ளப்பட்ட  நடைபவனியில் சேகரிக்கப்பட்ட நிதியில் யாழ். தெல்லிப்பளையில் புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றமை எல்லோரும் அறிந்தது குறிப்பிடத்தக்கவிடையம்.

இதன் அடுத்த கட்டமாக தெற்கே கராப்பிட்டியவில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் வைத்திய சிகிச்சைப் பிரிவிற்கு நிதிப்பங்களிப்பை வழங்கும் நோக்கில் நடைபவனி ஏற்பாடாகியுள்ளது.

ஐந்தாம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி இயக்கச்சி சந்தியிலிருந்து ஆரம்பமாகிய  நடைபயணம் கிளிநொச்சியை வந்தடைந்தது.

கராப்பிட்டியவில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் வைத்திய சிகிச்சைப் பிரிவிற்கு நிதிப்பங்களிப்பை வழங்கும் நோக்கில் சென்றுகொண்டிருக்கும்  நடைபவனிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என உதவிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.14657307_547789118752491_2096844160617550163_n61-2 63-2 64-2 14581366_547789128752490_2300948287082045240_n 14606541_547789195419150_4474437303402717661_n 14641989_547789282085808_2422676114751805663_n

Comments

comments, Login your facebook to comment