இன்று திங்கட்கிழமை  கிளிநொச்சி ஜெர்மன்  தொழிற் பயிற்சி  நிறுவனத்திற்கு  விஜயம் செய்த    இலங்கைக்கான  ஜெர்மன் உயர்ஸ்தானிகர் மற்றும் ஜெர்மன் நாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து   குறித்த தொழிற் பயிற்சி  நிறுவனத்தின் செயற்பாடுகள் என்ன  இங்கு எவ்வாறான  கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு இவ்வாறான தொழில் முயற்சிகளுக்கு  முதலீடுகள்  எவ்வாறு உள்ளன  என்பது சம்பந்தமாக   கலந்துரையாடல்  ஒன்று இடம்பெற்றுள்ளது

அதனைத்தொடர்ந்து குறித்த  தொழிற் பயிற்சி  நிறுவனத்தின் கட்டட அமைவிடங்கள் கற்கை நிலையங்கள் , என்பவற்றை குறித்த குழுவினர்  பார்வையிட்டதுடன்  மாணவர்களிடமும்  பயிற்சி  நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் இருப்பிட வசதிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.72-173-1 74-1 75-1 76-1 77-1 78-1

Comments

comments, Login your facebook to comment