801a9763089c5c8b56445e86a16fe851_XLகிளிநொச்சி தருமபுரம் பகுதியில் 24 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சிறுவனை சான்று பெற்ற பாடசாலையில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 24 போத்தல் கசிப்பினை உடமையில் வைத்திருந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனை நேற்று தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவன் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த சிறுவன் தான் கசிப்பு வைத்திருந்ததை நீதிமன்றில் ஏற்றுக்கொண்ட நிலையில் இது தொடர்பான தீர்ப்பிற்காக எதிர்வரும் 3ஆம்திகதி தவணையிடப்பட்டதுடன் அச்சுவேலியில் அமைந்துள்ள சான்று பெற்ற பாடசாலையில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment