625.500.560.350.160.300.053.800.900.160.90மலையக மக்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு பொதுக்கூட்டம் ஒன்று கிளிநொச்சியில்நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொழிற் சங்க கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை(15) பி.ப 4.00 மணிக்கு கிளிநொச்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

மாவட்ட அரசியல் தலைவர்கள், மற்றும் சிவில் தொழிற்சங்க அமைப்புகள் ,சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக தங்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு மலைய மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள்.

ஆனால் அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ளாமல் மந்த போக்கை கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment