625.0.560.320.160.600.053.800.668.160.90எங்கள் வீரர்களும் தேசிய அணியில் இடம் பெற வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்க செயலாளர் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

காவேரிக் கலா மன்றம் மற்றும் K.K.M, Vanni Hope பின் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட துடுப்பட்டச் சங்கத்தினால் நடத்தப்படும் வடமாகாணத்தின் நட்சத்திர வீரர்கள் கலந்து கொள்ளும் K.P.L -T-20 கடின பந்து போட்டி தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த K.P.L-T20 போட்டியானது முதன் முறையாக வடக்கு மாகாணத்தின் நட்சத்திர வீரர்களையும் இணைத்து நடாத்துகின்றோம் . எங்களுடைய கிளிநொச்சி மாவட்டத்தின் வீரர்களும் தேசிய அணியில் இடம்பெற வேண்டும்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் இது வரையும் கடினப்பந்து அணியிரைக் கொண்ட 13 கழகங்கள் பதிவு செய்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவேதான் இந்த K.P.L-T20 போட்டிக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் .இதன் ஊடாகத்தான் எங்களுடைய வீரர்களின் திறமைகள் சாதனைகள் வெளிக்கொண்டுவரப்படும் என்றார்.

இந்த ஊடக சந்திப்பு இன்று மாலை கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கதின் தலைவர் சௌந்தரராஜா தலைமையில் பண்டிதர் பரந்தாமன் கல்லுாரியில் இடம் பெற்றது.625.0.560.320.160.600.053.800.668.160.90 625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Comments

comments, Login your facebook to comment