625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)_1மாவட்ட மட்ட முதியோர் விளையாட்டுப் போட்டிகள் கிளிநொச்சி கூட்டுறவாளர் வளாகத்தில் இன்று(14) காலை 10.00 மணிக்கு கிளி.மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தபேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட மட்ட முதியோர் விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் கிளிநொச்சியில்முதியோர்களை கௌரவிக்கும் முகமாக கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் திணைக்களம் கரைச்சி ,கண்டாவளை ,பூநகரி , பளை ஆகிய நான்கு பிரதேச செயலகபிரிவுகளிலும் முதியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டிருந்தது.

அதில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்காகவே இப்போட்டி நடாத்தப்பட்டது.

இந்த போட்டியில் வேகநடை, நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், கிடுகு பின்னுதல்போன்ற போட்டிகள் இடம் பெற்றன.

குறித்த விளையாட்டுப் போட்டியில் , கரைச்சி,கண்டாவளை, பூநகரி ,பளை ஆகிய பிரதேசசெயலகங்களுக்குரிய சமூக சேவை உத்தியோகத்தர்கள் கரைச்சி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் பிரபா மற்றும் நான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய முதியவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதில் முதியவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)_1625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90_1

Comments

comments, Login your facebook to comment