whi1சர்வதேச வெண்பிரம்பு தினத்தை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) வடக்கிலும் மலையகத்திலும் விசேட விழிப்புணர்வு பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிளிநொச்சியில், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி, கிளிநொச்சி டிப்;போ சந்தியில் விழிப்புலனற்றோருக்கான அடிப்படை உரிமைகள் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகப்பட்டன.

அதனை தொடர்ந்து அங்கிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி வரை விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது. பேரணியின் பின்னர் பாடசாலை மண்டபத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

அதேவேளை, மலையகத்திலும் வெண்பிரம்பு தின விழிப்புணர்வு பேரணிகள் இடம்பெற்றிருந்தன. குறித்த பேரணியை ஹற்றன் விழிப்பு, நேத்ரா கண்பார்வை அற்றோர் பாடசாலை ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். ஹற்றன் பேருந்து தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதியினூடாக புட் சிட்டி வரை இந்த பேரணி இடம்பெற்றிருந்தது.

சர்வதேச வெண்பிரம்பு தினம் கடந்த 1961ஆம் ஆண்டு முதல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.whi1

Comments

comments, Login your facebook to comment