625.0.560.320.160.600.053.800.668.160.90 (8)கொம்மந்தரை வல்வெட்டித்துறைச் சேர்ந்த கிளிநொச்சியின் பிரபல வர்த்தகர் கிருஸ்ணசாமி ரதீசன் (வயது36) என்பவர் கடந்த 12ஆம் திகதி காணாமல்போயுள்ளார்.

குறித்த நபரைக் காணவில்லை என உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அமைவாக கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இவர் கடத்தப்பட்டிருப்பார் என ஒருசிலரும், கடன்தொல்லையினால் தலைமறைவாகி இருப்பார் என ஒரு சிலரும் கூற, பொலிசாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைவாக விசாரைணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் 18.10.2016 முற்பகல் குறித்த வர்த்தகர் தானாகவே கிளிநொச்சிப் பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது பணியாளர்கள் சந்தோசக்களிப்பில் ஆரவாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்பு குறித்த வர்த்தகரை கிளிநொச்சிப் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பதில்பொறுப்பதிகாரி அனந்த சுமணசிறி விசாரணைக்கு உட்படுத்தியத்தில் தான் தனது வேலைப்பளு காரணமாக சரியாக நித்திரைகளின்றி மன உளைச்சலால் அவதிப்பட்டதாகவும்,

இதனால் செய்வதறியாது பேரூந்தில் ஏறி வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களிற்கு பேரூந்திலையே பயணம் செய்ததாகவும்,

தனது மனநிலை சரியானதும் தான்  கிளிநொச்சிக்கு திரும்பி உள்ளதாகவும் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடன் காரணமாக தலைமறைவாகவில்லை எனவும் தனது வாக்குமூலத்தில் பதிவிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கடன்காரணமாக தலைமறைவாகி இருந்திருப்பாரா என எமது செய்திப்பிரிவு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வினவிய போது,

அவர் தங்களுக்கு பணம் தர வேண்டும் என இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் வரவில்லை.அவர் வர்த்தகங்கள் செய்வதனால் சுழற்சி முறையிலான சில கடன்கள் இருப்பதாக அறிய முடிகின்றது என கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.625.0.560.320.160.600.053.800.668.160.90 (8)625.0.560.320.160.600.053.800.668.160.90 (11)625.0.560.320.160.600.053.800.668.160.90 (11)

Comments

comments, Login your facebook to comment