625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)கடந்த மாதம் 16ஆம் திகதி தீ விபத்தினால் எறிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை 17ஆம் திகதி பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு தற்காலிகக் கடைகளை அமைப்பதற்கும் உறுதி கூறிச் சென்றிருந்தார்.

அதன் பிரகாரம் கரைச்சிப் பிரதேச சபையினரால் வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில்,தீவிபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச் சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிக கடைகளை அமைப்பதற்கு கடந்த மாதம் 23ஆம் திகதி 9 மில்லியன் ரூபாயினை ஒதுக்கியிருந்தார்.

அதனடிப்படியில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு தற்காலிக கடைகளை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இந்த வேலையினை வெகு விரைவில் முடிப்பதற்கு நான்கு ஒப்பந்ததாரரிடம் பணிகள் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் தற்காலிகமாக அமைக்கும் 45 கடைகளுக்கான பணிகள் தற்போது 90% விகிதமான வேலைகள் முடிவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

Comments

comments, Login your facebook to comment