police.650_0கிளிநொச்சி வன்னேரிக்குளம் காட்டுப்பகுதியில் மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இருந்தும் காட்டுப்பகுதியில் மண் ஏற்றிய குற்றச்சாட்டில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

நேற்று இரவு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மாஅதிபரின் விசேட குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மண் ஏற்றிய ஆறுபேரை கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த நபர்களிடம் இருந்து நான்கு டிப்பர் ரக வாகனங்கள் மற்றும் ஒரு ஜேசிபி ரக வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆறுபேரினையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட குழுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

comments, Login your facebook to comment