downloadகுருகுல பிதா என எல்லோராலும் அழைக்கப்படும் அப்புஜீ அவர்களின் நூறாவது ஜனன தின நிகழ்வும் உருவச்சிலை திறப்பும் ‘நினைவழியாப் பெருமனிதன்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவும் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்திருக்கும் குருகுலத்தில் அப்புஜீ அவர்களின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்ட பின்னர், காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி இந்துக்கல்லூரி மண்டபத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் ‘நினைவழியப் பெருமனிதன்’ என்னும் நூல் வெளயீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தவத்திரு மகாதேவ சுவாமிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் திரு சிவபூமி தலைவர் ஆறுதிருமுகன், மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, மகாதேவ சைவச்சிறுவர் இல்லத்தலைவர் இராசநாயகம்,

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், வலயக்கல்விப்பணிப்பாளர் க.முருகவேல், ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.

இதேவேளை இதுவரை காலமும் குருகுலத்தில் இருந்து கல்வி பயின்ற பழைய மாணவர்களின் விபரங்களை சேகரிக்கவுள்ளதால் குருகுலத்தில் இருந்து கல்வி பயின்ற பழைய மாணவர்கள் இதில் குறிப்பிடபட்டுள்ள தொலைபேசி ஊடாகவே அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாகவே தொடர்பினை ஏற்படுத்துமாறும் விழா ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.

இராசரத்தினம் -0094772881005

பசுபதிப்பிள்ளை (வடக்கு மாகாண சபை உறுப்பினர்)-009477895499

மின்னஞ்சல்:- raajaratnamsutharsan@gmail.com625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment