1496கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடா இறங்குதுறையினை அபிவிருத்தி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்குடா இறங்குதுறை அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் கடற்தொழிலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் தமது படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதிலும் படகுகளை கரை சேர்ப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடலிலிருந்து கரையை வந்தடைவதற்கு அமைக்கப்பட்ட ஆழமான வாய்க்கால்பகுதி மண் நிரம்பி காணப்படுகின்றது.  இதனை ஆழமாக்கி தருமாறும் இப்பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூநகரி பிரதேசத்தில் உள்ள ஆறு மீனவர் இறங்குதுறைகளைப் புனரமைப்பதற்கு 25.5 மில்லியன் ரூபாய் நிதி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment