DSC_0165_1குருகுலபிதா அப்புஜி அவர்களின் நூறாவது ஜனதின நிகழ்வையொட்டி அப்புஜி அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்வும் நினைவழியாப் பெருமனிதன் நூல் வெளியீட்டு விழாவும் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

குருகுலபிதா என அழைக்கப்படும் கதிரவேலு (அப்புஜி) அவர்களின் நூறாவது ஜனனதின நிகழ்வையொட்டி கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள குருகுலவளாகத்தில் அமைக்கப்பட்ட அப்புஜி அவர்களின் உருவச்சிலை இன்று 9.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்பட்ட உருவச்சிலைக்கான மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத்தொடர்ந்து அப்புஜியின் திருவுருவப்படத்தை தாங்கிய ஊர்வலம் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மண்டபத்தை சென்றடைந்து அங்கு நினைவழியா பெருமனிதன் எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சத்தியசீலன் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்ற முன்னாள் அரச அதிபர் தி.இராசநாயகம் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.DSC_0052_1DSC_0077_1 DSC_0163_1 DSC_0165_1

Comments

comments, Login your facebook to comment